புதுச்சேரி

உலக வெள்ளி பதக்கம் வென்ற லோகநாத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரி, அக்டோபர் 28: பாராகுவே நாட்டில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற லோகநாத் ஏ.ஆர்-ஐ முதலமைச்சர் ரங்கசாமி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் முதலமைச்சர் ந.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின்போது பாராகுவே நாட்டில் நடைபெற்ற உலக ஸ்கேட்டிங் போட்டி 2026-ல் வெள்ளிப் பதக்கம் வென்று புதுச்சேரிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த லோக்நாத் ஆர்.ஏ அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது வரலாற்று சாதனைக்கு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்து மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்தினார். மேலும் புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு ஆணயம், பயிற்சியாளர்கள், பெற்றோர் மற்றும் சங்க உறுப்பினர்களின் பங்களிப்பையும் முதலமைச்சர் பாராட்டினார். இந்த சந்திப்பின் போது ஸ்கேட்டிங் ரிங்கை சுற்றியுள்ள சர்க்யூட் சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் சர்வதேச அளவில் நடைபெறவுள்ள ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்க புதுச்சேரியைச் சேர்ந்த நான்கு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary: Chief Minister N. Rangasamy congratulated Loganath, who won a silver medal at the World Skating Championship in Paraguay, when he met the Chief Minister with Puducherry Roller Skating Association officials. The Chief Minister praised the sports authority, coaches, parents and association members, and said work on the circuit road around the skating rink would begin soon.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன