தமிழ்நாடு

ஆரோவில் அருகே ரவுடி ராஜேந்திரகுமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை

ஆரோவில், அக்டோபர் 27: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புதுச்சேரி மாநிலம் மூலக்குளம் பகுதியை சேர்ந்த ரவுடி ராஜேந்திரகுமாரன் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்த சீசிங் குமார் என்கிற ராஜேந்திர குமார் இரவு 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே புதுச்சேரி அடுத்த தமிழக எல்லை பகுதியான மேட்டுப்பாளையம் பகுதியில் லாரி முனையம் அருகே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்துயுயிரிழந்தார். ஆரோவில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன