புதுச்சேரி

அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை: குடிசை மாற்று வாரிய அதிகாரியிடம் நேரு எம்.எல்.ஏ. நேரில் மனு!

புதுச்சேரி, நவ. 3:
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்து வருவதாகவும், குடிசை மாற்று வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ. நேரு அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார்.

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட குபேர் நகர், கண்டக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர் மற்றும் கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் தங்களது பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, மின்தடை, கழிவுநீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேருவிடம் முறையிட்டனர்.

மேலும், அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே மாதாந்திர வாடகை தவறாமல் செலுத்தி வருகிறோம் என்றும், ஆனால் கடந்த சில மாதங்களாக மின் இணைப்பு துண்டிப்பு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வீடு கட்டும் மானிய உதவித்தொகை வழங்கப்படாதது உள்ளிட்ட எந்தவொரு கோரிக்கைக்கும் குடிசை மாற்று வாரிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு தலைமையில் கண்டக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி மக்களுடன் குடிசை மாற்று வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றார். அங்கு முதன்மை செயல் அதிகாரி ரவிச்சந்திரனைச் சந்தித்து மக்களின் குறைகளை விவரித்து உடனடி தீர்வு காணக் கோரி மனு அளித்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், பிரச்சனைகளுக்கு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

English summary: Residents of government apartment complexes in the Uruliyanpet area of Puducherry alleged that they lack basic facilities and that the Slum Clearance Board has not acted. According to the report, they told local MLA G. Nehru about drinking water shortages, power cuts and sewage problems, and said they pay monthly rent regularly. The MLA went with residents to the board’s office and submitted a petition to its chief executive officer Ravichandran, and officials assured that action would be taken soon.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன