புதுச்சேரி

புதுச்சேரி விடுதலை நாள்: நவம்பர் 1-ல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட உத்தரவு!

புதுச்சேரி, அக். 28: புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு வரும் நவம்பர் 1-ம் தேதியன்று யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றி சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இந்திய ஒன்றியத்துடன் இணைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான நவம்பர் 1-ம் தேதி, ஆண்டுதோறும் புதுச்சேரி விடுதலை நாளாக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டும் இந்நாளை அரசு முறைப்படி கோலாகலமாகக் கொண்டாடுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாகப் புதுச்சேரி அரசின் உள்துறை சார்பு செயலர் ஹீரன், அனைத்துத் துறைத் தலைவர்கள், அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த உத்தரவில், “புதுச்சேரி விடுதலை நாள் வரும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள் மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் அனைத்தும் நவம்பர் 1-ம் தேதி காலையில் தங்களது அலுவலக வளாகங்களில் தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதையுடன் விடுதலை நாள் விழாவைக் கொண்டாட வேண்டும்” என்று திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன