தஞ்சையில் கோலாகலமாக தொடங்கியது பேரரசர் ராஜராஜ சோழனின் சதய விழா
தஞ்சாவூர், அக்டோபர் 21: பேரரசர் ராஜராஜ சோழனின் 1041-வது பிறந்தநாள் விழா தஞ்சாவூரில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
மாமன்னரின் புகழைப் போற்றும் வகையில் தஞ்சை அரண்மனையில் தொடங்கி பெரிய கோயில் வரை சதய நட்சத்திரப் பெருவிழா ஊர்வலம் நடைபெற்றது. தமிழர்களை ஒருங்கிணைத்த மாமன்னருக்கு மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்குத் தஞ்சை பெரிய கோயில் வளாகம் மற்றும் ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட பகுதிகள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
English summary: The 1041st Sathaya Natchathira festival marking the birth anniversary of Emperor Raja Raja Chola began in Thanjavur, with a procession from the Thanjavur palace to the Big Temple. The Big Temple complex and the Raja Raja Chola statue are decorated with coloured lights for the two-day festival.