தமிழ்நாடு

பெரியார் பல்கலைக்கழக அளவிலான கபடி போட்டியில் காரப்பட்டு கல்லூரி மாணவிகள் முதலிடம்

திருச்செங்கோடு, அக்டோபர் 31: பெரியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் யூனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் சிறப்பாக விளையாடிய காரப்பட்டு கல்லூரி மாணவிகள் முதலிடத்தை வென்று கோப்பையும் சான்றிதழும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவிகளையும் உடற்கல்வி ஆசிரியர் பாலு, பயிற்சியாளர் சரவணன் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் ஆகியோரையும் கல்லூரியின் நிறுவனர் அருள், இயக்குனர் திலகபதி அருள், செயலாளர் தமிழரசு, முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary: Women students of Unique Arts and Science College at Karapattu near Uthangarai, Krishnagiri district, won first place in the Periyar University-level kabaddi tournament held at Vivekananda Women’s Arts and Science College, Tiruchengode. More than 25 teams took part, and the winners received a trophy and certificates. The college management, principal and professors congratulated the students, physical education teacher Balu, coach Saravanan and coordinator Jayaseelan.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன