காரைக்காலில் ஆமணக்கு அரைக்காவடிப் புழுக்கள் தொல்லை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
காரைக்கால், நவம்பர் 1: காரைக்கால் மாவட்டத்தில் பருவமழை காலத்தை ஒட்டி ஆமணக்கு அரைக்காவடிப் புழுக்கள் அதிகளவில் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆமணக்கு இலைகளை உணவாகக் கொண்ட இந்தப் புழுக்கள் வீடுகளைச் சுற்றியுள்ள செடிகள், வீட்டுச் சுவர்கள் மற்றும் சாலைகளில் கூட்டம் கூட்டமாக ஊர்ந்து செல்வதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீடுகளின் சமையலறை உள்ளிட்ட பகுதிகளிலும் புழுக்கள் புகுந்து தொல்லை தருவதால் அன்றாடப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள ஆமணக்கு அரைக்காவடிப் புழுக்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை உடனடியாக அகற்றவும் மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English summary: Castor hairy caterpillars are spreading in large numbers in Karaikal district during the monsoon season, alarming residents. The caterpillars, which feed on castor leaves, are crawling in groups on plants, house walls and roads and entering homes, including kitchens, and residents said their daily routines and sleep are affected. Residents have asked the district administration and the concerned departments to control and remove them.
