புதுச்சேரி

புதுச்சேரி தன்னாட்சி நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் உடனே வழங்க வேண்டும்: இரா.செந்தில்குமார் எம்எல்ஏ வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ. 5:
புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் மகாத்மா காந்தி பல்மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இரா.செந்தில்குமார் எம்எல்ஏ அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக ஊதியம் கிடைக்காமல் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். இந்நிதியாண்டிற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல்கள் முறையாக இருந்தபோதிலும், நிதித்துறையில் நிலவும் தேவையற்ற கோப்பு நகர்வு தாமதங்களே இந்த ஊதிய முடக்கத்திற்கு முதன்மைக் காரணமாக உள்ளது.”

“தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட சூழலில், மாதக்கணக்கில் சம்பளம் பெற முடியாமல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையைக் கூட கொண்டாட இயலாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, பண்டிகைக்கு முன்பாகவே நிலுவையில் உள்ள அனைத்து மாத ஊதியங்களையும் முழுமையாக பட்டுவாடா செய்ய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

மேலும், “தன்னாட்சி நிறுவன ஊழியர்களை அரசின் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை அமைப்பில் (IFMS) முழுமையாக இணைக்க வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் மாதந்தோறும் எந்தவிதத் தடையுமின்றி தானியங்கி முறையில் ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் ஊதியம் சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று அவர் திட்டவட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary: Puducherry Assembly deputy opposition leader R. Senthilkumar, an MLA, urged the government to immediately pay overdue salaries to staff of autonomous bodies such as the Puducherry Technological University and the Mahatma Gandhi Dental College. In a statement he said employees have gone unpaid for months and blamed delays in file movement in the finance department, even though funds and approvals were in place. He also asked that these employees be fully brought under the government’s Integrated Financial Management System (IFMS) so salaries reach their bank accounts automatically each month.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன