தமிழ்நாடு

மழை வெள்ள நிவாரண உதவி மையம்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் 24 மணி நேர சேவை தொடக்கம்!

சென்னை, அக். 23:
சென்னையில் பருவமழை மற்றும் வெள்ள பாதிப்பு காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் ‘உதவும் கரம்’ வெள்ள நிவாரண உதவி மையம் சத்தியமூர்த்தி பவனில் இன்று முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள இந்த 24 மணி நேர வெள்ள நிவாரண உதவி மையத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று (23.10.2026) திறந்து வைத்தார். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உடனடி உதவி, அவசரத் தேவைகள் மற்றும் நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைத்து வழங்கிடும் வகையில் இந்த மையம் செயல்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மாநிலப் பொருளாளர் ரூபி மனோகரன், மாநிலப் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி மற்றும் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ். திரவியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். பருவமழை தீவிரமடையும் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் களத்தில் நின்று தோள் கொடுத்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பேரிடர் காலங்களில் உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த 24 மணி நேர வெள்ள நிவாரண உதவி மையம் மூலம் பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைகள் மற்றும் புகார்களைத் தெரிவித்து உதவிகளைப் பெறலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

English summary: The Tamil Nadu Congress Committee has started a 24-hour flood relief help centre called ‘Udhavum Karam’ at Sathyamurthy Bhavan in Chennai, which Congress MP Manickam Tagore opened on 23 October 2026. The centre will coordinate immediate help, emergency needs and relief materials during monsoon and flood periods, and the public can report emergency needs and complaints through it. Leaders including K.V. Thangabalu, Peter Alphonse and Ruby Manoharan were present.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன