புதுச்சேரி

சென்டாக் மாணவர் பெற்றோர் நலசங்கம் சார்பில் மருத்துவ மாணவர்களுக்கு உதவி

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பத்து சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 28 மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப், பாடப் புத்தகங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க தலைவர் மனோகரன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன. பொருளாதாரச் சூழல் காரணமாக எந்த ஒரு மாணவரின் மருத்துவக் கல்வியும் தடைப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary: In Puducherry, 28 students admitted to medical courses under the 10 percent reservation for government school students were given stethoscopes, textbooks and scholarships by the Centac Students Parents Welfare Association. The event was presided over by association president Narayanasamy, and it was stated that the aim is that no student’s medical education should be hindered by financial circumstances.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன