புதுச்சேரி

புதுச்சேரியில் ஆபத்தான நிலையில் இருந்த நியூட்டோன் தியேட்டர் சுவர் இடிப்பு: எம்.எல்.ஏ. நேரு முயற்சிக்கு வெற்றி!

புதுச்சேரி, 22/10/2026: புதுச்சேரி தாவரவியல் பூங்கா எதிரே பல ஆண்டுகளுக்கு முன்பு புகழுடன் இயங்கி வந்த நியூட்டோன் திரையரங்கம் காலப்போக்கில் மூடப்பட்டது. பராமரிப்பின்றி பாழடைந்து கிடந்த இத்திரையரங்கின் சுற்றுச்சுவர்களில் மரங்கள், செடிகள் முளைத்து சுவர் பெரும் விரிசல்களுடன் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது. மேலும், இச்சுவரின் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் காரணமாக சுவரின் உறுதித்தன்மை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அண்ணா சிலை சிக்னல் மிக அருகிலேயே அமைந்துள்ளதால், தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலின் போது இந்த சுவரின் அருகில்தான் நின்று செல்ல வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது.

இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விபத்து ஏற்படும் பெரும் அச்சுறுத்தல் நிலவியது. இதனையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.நேரு (குப்புசாமி), விபத்து எதுவும் ஏற்படும் முன்பாகவே மோசமான நிலையில் உள்ள நியூட்டோன் தியேட்டர் சுவரை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் தீவிர கோரிக்கை மனு அளித்திருந்தார். தற்போது புதுச்சேரியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பாழடைந்த சுவர் எந்த நேரத்திலும் சரிந்து விழக்கூடும் என்ற சூழல் உருவானது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, காவல் துறையின் முழு பாதுகாப்புடன் ஜேசிபி எந்திரங்கள் மூலம் சுவரை இடித்து அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டன.

பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சுவரை ஒட்டி செல்லாதவாறு போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எம்.எல்.ஏ. நேருவின் தொடர் நடவடிக்கையால் ஆபத்தான சுவர் அகற்றப்படுவது அப்பகுதி மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

English summary: The ruined wall of the closed Newtone theatre opposite the Puducherry botanical garden, which was cracked and at risk of collapse, is being demolished with JCB machines under police protection. Uruvaiyaru MLA G. Nehru (Kuppusamy) had petitioned the district administration to remove it before any accident, as the monsoon intensified. Barricades were set up and police and municipal staff are monitoring the work.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன