புதுச்சேரி

உறையன்பேட்டை தொகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் குறித்து எம்எல்ஏ நேரு துறை பொறியாளருடன் ஆலோசனை

புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் ஒப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், முல்லை நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மறைமலை அடிகள் சாலை நீதிமன்ற முன்பகுதியில் உள்ள வாய்க்கால் வழியாக உப்பனாறு வாய்க்காலில் கலப்பதால் அடைப்பு ஏற்பட்டு நீர் சூழ்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே முல்லை நகர், செங்கேனி அம்மன் நகர், ஜே.வி.எஸ். நகர், பெரியார் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் வசிக்கும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து புதிதாக அமைக்கப்பட வேண்டிய சிமெண்ட் சாலைகள், புதிய கான்கிரீட் வாய்க்கால்கள் அமைத்தல் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

English summary: Uppalam MLA Nehru held a consultation with the Public Works chief engineer on development works in his constituency in Puducherry. He asked for quick completion of the road over the Oppanar drain and for desilting of the Uppanar drain to prevent waterlogging in areas such as Mullai Nagar and Periyar Nagar. New cement roads and concrete drains were also discussed.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன