புதுச்சேரி

புதுச்சேரி முதலியார்பேட்டையில் சுசுகி ஏபிபி மோட்டார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள சுசுகி ஏபிபி மோட்டார்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் புருஷோத்தமன், மேலாளர் விநாயகமுருகன், பொது மேலாளர் நவீன்ராஜ் மற்றும் சர்வீஸ் மேலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்கூட்டர் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில், போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுதல், சாலை பாதுகாப்பு விதிகளை மதித்தல் மற்றும் பொறுப்புடன் வாகனம் ஓட்டுதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன