புதுச்சேரி
அர்ணா புயல் எதிரொலி: ஏனாமில் அக்டோபர் 27, 28-ல் பள்ளிகளுக்கு விடுமுறை
ஏனாம், அக்டோபர் 28: அர்ணா புயல் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசமான ஏநாமில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்ணா புயல் காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் அக்டோபர் 28 ஆம் தேதி அன்று ஆந்திராவில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அடுத்து ஆந்திர மாநில பகுதியில் அமைந்துள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


