புதுச்சேரி

பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் காட்டேரிக்குப்பம் இருளாளர் குடியிருப்பு மக்கள் புகார்

புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி காட்டேரிக்குப்பம் ராசாங்குளம் பகுதியில் வசித்து வரும் இருளாளர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் பல ஆண்டுகளாகப் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றித் தவித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

இராசாங்குளம் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு முறையான பட்டா, சாலை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் மழைநீர் வாய்க்கால் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக இல்லை எனக் கூறப்படுகிறது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கோட்டகுப்பத்தைச் சேர்ந்த சுகுமார் மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் தங்களுக்கு பல்வேறு வகைகளில் அச்சுறுத்தலும் மிரட்டலும் விடுப்பதாகவும் இருளாளர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாகக் காட்டேரிக்குப்பம் காவல்துறையினர் உரிய முறையில் விசாரித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வருவாய் துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ராசாங்குளம் இருளாளர் குடியிருப்பை நேரில் ஆய்வு செய்து பட்டா வழங்குதல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

English summary: Irular community families living at Rasangulam in Katteri Kuppam, Puducherry, said they have long lacked title deeds and basic amenities such as roads, drinking water, electricity, toilets and storm drains, and that water stagnates in the rainy season. They also alleged that Sukumar of Kottakuppam and his son Dinesh threaten and intimidate them. The residents asked Katteri Kuppam police to investigate and revenue and local body officials to inspect the settlement and grant title deeds and facilities.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன