புதுச்சேரி

புதுச்சேரியில் ஐந்து மாநில உதயநாள் விழா துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தலைமையில் நடைபெற்றது

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி ஆளுநர் மாளிகை சார்பில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம், ஜம்மு காஷ்மீர், லடாக் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். புதுச்சேரி பல்கலைக்கழகம், சமுதாய கல்லூரி ஜிப்மர், மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, அன்னை தெரேசா செவிலியர் கல்லூரி மற்றும் புதுச்சேரி தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் ஐந்து மாநிலங்களைச் சார்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், மைபாரத் தன்னார்வலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து மாநிலங்களின் கலை கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் ஆடற் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சரத் சவுகான், காவல்துறை இயக்குனர் ஷாலினி சிங் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also
Close