தேசியம்

மலேசியாவில் தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் சங்கத்தின் 23-ஆம் ஆண்டு விழா: தமிழக நிர்வாகிகள் 280 பேர் உற்சாகப் பங்கேற்பு!

கோலாலம்பூர்: இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தடங்கள் சங்கம் மற்றும் கட்டுமான அமைப்பு சாரா சங்கத்தின் 23-ஆம் ஆண்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள சைனா டவுன் கிராண்ட் பால்ரூம் அரங்கத்தில் அக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக இந்த மாநாட்டு நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இந்த விழாவிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. (INTUC) மாநில மூத்த துணைத் தலைவருமான விருகை வி.என். கண்ணன் தலைமை வகித்தார். அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களின் நலன்கள், தொழில்சார் உரிமைகள் மற்றும் எதிர்காலப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தென் சென்னை மாவட்ட மேற்கு கழகச் செயலாளருமான விருகை வி.என். ரவி, தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. மாநிலத் தலைவர் எம். பன்னீர்செல்வம், ‘நீதியின் குரல்’ சி.ஆர். பாஸ்கரன், வழக்கறிஞர் எஸ். தனசேகரன் மற்றும் தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச் செயலாளர் ஜி. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும் மலேசிய நாட்டைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களான டாக்டர் அண்ணா துரிஷ் பார் செட்டி, சகாதேவன், மார்க் ஆண்டனி, மார்க் எல்விஸ், நந்தினி ரமலான் உள்ளிட்டோரும் இவ்விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்த சங்கத்தைச் சேர்ந்த சுமார் 280-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மலேசியாவிற்கு வருகை தந்து மாநாட்டில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன