கதிர்காமத்தில் அரசு தீபாவளி சிறப்பு பரிசுத் தொகுப்பு: பொதுமக்களுக்கு எம்.எல்.ஏ எஸ்.எஸ்.அழகு நேரில் வழங்கினார்!

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் தொகுப்பு பரிசுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை கதிர்காமம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.அழகு (எ) அழகானந்தம் தொகுதி மக்களுக்கு நேரில் வழங்கினார்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புத் தொகுப்பு பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.அழகு நேரில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அரசின் சிறப்புத் தொகுப்புப் பொருட்களை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். பண்டிகைக் காலத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பயன்பெறும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தப் பொருட்களை பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுச் சென்றனர்.
நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் சிரமமின்றி, தங்குதடையின்றி வரிசையில் நின்று விரைவாகப் பொருட்களைப் பெற்றுச் செல்லும் வகையில் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வின் போது தொகுதிப் பிரமுகர்கள், நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடனிருந்தனர்.
English summary: Kathirkamam MLA S.S. Azhagu (Azhaganandam) distributed the Puducherry government’s special Deepavali gift packs to residents at ration shops in his constituency. According to the report, the packs are being given to ration card holders through fair price shops on the Chief Minister’s instruction. Arrangements were made for people to collect the items without difficulty, and local dignitaries and shop staff were present.

