மதுரையில் சு. வெங்கடேசன் எம்.பி. தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் (DISHA) கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருகை தந்தவர்களை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப. வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாடுகள், குடிநீர் விநியோகம், சாலை வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய நலத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், பெ. விஸ்வநாதன், திஷா குழு துணைத்தலைவர் தங்கதமிழ்ச்செல்வன் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் அ. கல்லாணை, எஸ்.ஆர். தங்கப்பாண்டி, எம்.வி. கருப்பையா, மதார் பதூருதின், எம்.எம். கோபிசன், ம. விஜய் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) தி. நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், மதுரை மாநகர காவல் ஆணையாளர் எஸ். ராஜேந்திரன் இ.கா.ப., மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந. தேவநாதன் இ.கா.ப., மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) திட்ட இயக்குநர் சா. சதீஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மை அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தரமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.


