புதுச்சேரி
கிருமாம்பாக்கத்தில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இரண்டு ரவுடிகள் கைது
புதுச்சேரி, நவம்பர் 7: புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிருமாம்பாக்கத்தைச் சேர்ந்த கோசகுமார் மற்றும் புதுச்சேரி பழைய சாரத்தைச் சேர்ந்த மொட்டைமணி ஆகிய இரண்டு ரவுடிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் நலக்குழுவின் மூலம் உரிய ஆலோசனை மற்றும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.