புதுச்சேரி

வில்லியனூர் ஜவகர் வித்யாநிகேதன் பள்ளியில் தீய எண்ணங்களை எரித்து மாணவர்கள் தீபாவளி கொண்டாட்டம்

புதுச்சேரி, நவம்பர் 7: புதுச்சேரி வில்லியனூர் ஜவகர் வித்யாநிகேதன் மேல்நிலை பள்ளியில் தீபாவளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர்களும் ஆசிரியப் பெருமக்களும் தங்கள் உள்ளங்களில் மறைந்திருக்கும் அசுரத் தன்மைகளையும் தீய எண்ணங்களையும் அகற்றும் நோக்கில், அவற்றை காகிதத் துண்டுகளில் எழுதி தீயிட்டு கொளுத்தினர். அப்போது அனைவரும் ஒன்றிணைந்து ‘நரகாசுரன் ஒழிக, தீய எண்ணங்கள் அழியட்டும்’ என முழக்கமிட்டனர்.

தொடர்ந்து அனைவரும் ஒருவருக்கு ஒருவர் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். ஆசிரியப் பெருமக்களுக்கு முந்திரி பருப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் பட்டாசுகளைப் பாதுகாப்பாக வெடிப்பது, மத்தாப்புகளைக் கொளுத்துவது, புகை வானங்களை ஏற்றுவது போன்றவற்றுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நிறைவாக தீபாவளி நன்னாளில் மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் ஆசி பெற்று பெரியோர்களை மதித்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன