முத்தியால்பேட்டை தொகுதியில் விலையில்லா தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
புதுச்சேரி, நவம்பர் 7: முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் விலையில்லா தீபாவளி மளிகைத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் இந்த தீபாவளி சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியினை முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
சோலைநகர் சிங்காரவேலர் சமுதாய நலக்கூடம், பாரதிதாசன் வீதி பழைய மேரி கட்டிடம் மற்றும் அங்காளம்மன் நகர் கோவில் எதிரில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் கலந்துகொண்டு பொதுமக்களுக்குப் பரிசுப் பொருட்களை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதன் மூலம் முத்தியால்பேட்டை தொகுதியில் சுமார் 10 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர் என்றும், இந்நிகழ்ச்சியின் போது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.