புதுச்சேரி

தீபாவளியை ஒட்டி விதிகளை மீறிச் செயல்படும் இறைச்சி கடைகளுக்கு அபராதம்: உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை

புதுச்சேரி, நவம்பர் 7: தீபாவளி பண்டிகையை ஒட்டி விதிகளை மீறிச் செயல்படும் இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என உழவர்கரை நகராட்சி எச்சரித்துள்ளது.

இது குறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் வினையராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நகராட்சிப் பகுதிகளில் ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகள் அதிகளவில் செயல்பட்டு வருவதாகவும், பண்டிகை நாட்களில் கூடுதல் கடைகள் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில கடைகளில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதும், சாலை ஓரங்களில் பொதுமார்வையில் ஆடு, கோழிகள் வெட்டப்பட்டு அதன் கழிவுகள் வாய்க்கால்களில் வீசப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து ஆய்வு செய்ய நகராட்சி ஊழியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த நவம்பர் 6 ஆம் தேதியிட்ட அறிவிப்பில், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையோரங்களில் ஆடு, கோழிகளை அறுத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன