புதுச்சேரி

நெல்லித்தோப்பு தொகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் இனிப்புகள் வழங்கல்

புதுச்சேரி, நவம்பர் 7: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தவெக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, நெல்லித்தோப்பு தொகுதி கழக நிர்வாகி இ. மகேந்திரன் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி மாநில தலைமைக்கழக நிர்வாகி புதியவன் மற்றும் கழக ஊடக பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் நிரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை வழங்கினர்.

நெல்லித்தோப்பு தொகுதி தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டாசுகள் வெடித்து தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன