புதுச்சேரி

காரைக்கால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் என்ஆர் காங்கிரஸ் தொழிற்சங்கம் தொடக்கம்

காரைக்கால், நவம்பர் 7: காரைக்கால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் புதிய தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழாவில் காரைக்கால் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன் கலந்துகொண்டு தொழிற்சங்க கல்வெட்டைத் திறந்து வைத்து கொடியேற்றினார். தொடர்ந்து புதிய தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் திருமுருகன், பால் மற்றும் பால் பொருட்களை மதிப்பு கூட்டி ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களாக தயாரித்து விற்பனை செய்வதன் மூலமாக கூட்டுறவு ஒன்றியத்தை மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன