புதுச்சேரி
புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை
புதுச்சேரி, அக்டோபர் 25: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்து, புதுச்சேரி துறைமுகத்தில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது முக்கிய துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வரும் 27ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனப் புதுச்சேரி அரசின் மீன்வளத்துறை வலியுறுத்தியுள்ளது.

