புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய ஸ்ரீ சண்முக ஹைப்பர் மார்க்கெட்டை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரி காமராஜர் சாலையில் நான்கு மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சண்முக ஹைப்பர் மார்க்கெட் புதிய ஷோரூம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் என். ரங்கசாமி ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கு ஏற்றியும் புதிய ஜவுளி ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், வி.பி.சிவகொழுந்து, ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஷண்முகம், ராஜேஸ்வரி சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் விழாவிற்கு வருகை தந்தவர்களை வரவேற்றனர்.

இந்த நான்கு மாடி ஷோரூமில் முதல் தளத்தில் பெண்களுக்கான சேலைகளும், இரண்டாவது தளத்தில் திருமணத்திற்கான பட்டுப்புடவைகள், பட்டு வேட்டிகள் மற்றும் அக்சசரீஸ்களும், மூன்றாவது தளத்தில் ஆண், பெண், சிறுவர்களுக்கான ரெடிமேட் ஆடைகளும், நான்காவது தளத்தில் ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், திறப்பு விழாவை முன்னிட்டு குழுக்கள் முறையில் ஐந்து அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு தங்க காசுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், தீபாவளி பண்டிகை வரை ஜவுளி மற்றும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி மற்றும் 1500 ரூபாய் அதற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன