புதுச்சேரி
புதுச்சேரி குருசுக்குப்பம் கடலில் வலைகளில் மீன்களுக்கு பதிலாக குப்பைகள் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி
புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரி குருசுக்குப்பம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலைகளில் மீன்களுக்கு பதிலாக அதிகளவில் குப்பைகள் சிக்கியதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்வதுடன் பொதுமக்கள் குப்பைகளை முறையாக அகற்றாமல் வாய்க்கால்கள் ஆறுகள் குளங்களில் வீசுவதால் அவை கடலில் கலக்கின்றன. இதனால் கடல் மாசுபடுவதுடன் மீனவர்களின் வலைகளும் சேதமடைவதாகவும் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர். பொதுமக்கள் குப்பைகளை குப்பை தொட்டிகளில் முறையாக சேர்த்து கடல் மாசுபடுவதை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


