பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக புதுச்சேரி – விழுப்புரம் ரயில் சேவையில் மாற்றம்
புதுச்சேரி, அக்டோபர் 25: பொறியியல் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 28 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் விழுப்புரம் இடையேயான ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயன் வெளியிட்டுள்ள தகவலின்படி, திருப்பதியில் இருந்து அதிகாலை 4.10 மணிக்கு புறப்படும் திருப்பதி – புதுச்சேரி மெமோர் ரயில் அக்டோபர் 28 ஆம் தேதி விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டு, விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், அதே நாளில் புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட வேண்டிய புதுச்சேரி – சென்னை எழும்பூர் மெமோர் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மாறாக, இந்த ரயில் விழுப்புரம் சந்திப்பிலிருந்து அன்று மாலை 4.49 மணிக்கு சென்னை எழும்பூருக்குப் புறப்படும் என்பதால், புதுச்சேரிக்கும் விழுப்புரத்திற்கும் இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.



