புதுச்சேரி
முதலியார்பேட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அன்னாபிஷேக பெருவிழா கோலாகலம்
புதுச்சேரி, அக்டோபர் 27: ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு முதலியார்பேட்டை தொகுதி நைனார் மண்டபம் சுதானா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ செல்வாம்பிகை உடனுரை ஸ்ரீ செல்வபுரீஸ்வரர் அன்னாபிஷேக பெருவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கைலாய சிவவாத்தியம் முழங்க பாரம்பரிய முறைப்படி தீப்பந்தம் ஏந்தி சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் தோலில் சுமந்து கொண்டு தாண்டவம் ஆடும் நிகழ்ச்சியை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாடவீதி வழியாக உற்சவ மூர்த்திகள் வலம் வந்ததை பொதுமக்களும் பக்தர்களும் மலர்தூவி வரவேற்றனர்.
நிறைவாக ஆலயத்திற்கு உற்சவ மூர்த்திகள் வந்தடைந்ததும் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் நகரமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சி மாநில வணிக பிரிவு தலைவருமான சத்தியராஜ் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
