தமிழ்நாடு

தேனி சிறையில் கைதிகள் தப்பி ஓடிய விவகாரம்: இரண்டு சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம்

தேனி, அக்டோபர் 27: தேனி சிறையில் கைதிக்கு வலிப்பு வந்தது போல் நாடகமாடி காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக இரண்டு சிறைக் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், முதன்மை சிறைக் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி சிறையில் சமையலறையில் இருந்த கரண்டி மற்றும் பாத்திரங்களைக் கொண்டு காவலர்களைத் தாக்கிய கைதிகள் கும்பலாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். தப்பிய கைதிகளில் இதுவரை நான்கு பேர் ஜோன் மூலம் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளை நிலங்கள், வாய்க்கால் பகுதிகள் மற்றும் புதர்களில் கைதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளத்திற்குத் தப்பிச் செல்லக் கூடும் என்பதால் எல்லைப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, தப்பிய கைதிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேனி சிறையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பில் குறைபாடு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன