தேசியம்
ஆந்திராவை தாக்கிய பெர்ணா புயல் கரையை கடந்த நிலையில் மூன்று பேர் உயிரிழப்பு
புதுச்சேரி, அக்டோபர் 28: பெர்ணா புயல் பெரும் சீற்றத்துடன் ஆந்திராவில் உள்ள நர்சாலாப்பூர் பகுதியில் கரையை கடந்த நிலையில், மழையின் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மசூரி பட்டணத்தில் முக்கிய சாலைகளும் குடியிருப்புகளும் தண்ணீரில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், எண்பதாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விளைந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
