தமிழ்நாடு
சேலத்தில் தனியார் பேருந்துகளுக்கும் அரசு செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சேலம், அக்டோபர் 28: சேலத்தில் தனியார் பேருந்துகளுக்கும் அரசு செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். தனியார்ப் பேருந்துகளையும் அரசு செயலியுடன் இணைத்து பொதுமக்கள் முன்பதிவு செய்யும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பயணிகள் எளிதாக தாங்கள் செல்லும் இடங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.