சமூகநீதி கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்
சென்னை, அக்டோபர் 29: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அடுத்த ஆண்டு தமிழக அரசு சார்பாக சமூகநீதி ஆய்வு மற்றும் கணக்காய்வு நடத்தப்படும் என்றும், அதற்காக ஆணையம் உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் எட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதியும், மதம் மாறிய இஸ்லாமியர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை தொடர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மக்களுக்கு தேவையானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.