தமிழ்நாடு
தொழிலதிபர் ஜெம் வீரமணி சொத்து அபகரிப்பு வழக்கில் பிரகாஷுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
சென்னை, அக்டோபர் 29: தொழிலதிபர் ஜெம் வீரமணி சொத்து அபகரிப்பு வழக்கில் பிரகாஷ் என்பவர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சிறுமிகளுடன் இருந்ததாகக் கூறப்படும் வீடியோக்களை காட்டி மிரட்டி, தொழிலதிபர் ஜெம் வீரமணியின் 80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பிரகாஷ் அபகரித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரகாஷின் மிரட்டல் காரணமாகவே வீரமணி தனது சொத்துக்களை விற்றதாகக் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருப்பதாகக் கூறப்படும் பிரகாஷைக் கண்டறியும் வகையில், இன்டர்போல் அமைப்புக்குத் தெரிவிக்கும் பொருட்டு அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.