புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026: நவம்பர் 17-ல் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் பேரணி அறிவிப்பு
புதுச்சேரி, அக்டோபர் 31: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 17 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி மாபெரும் கோரிக்கை பேரணி நடத்தப்படும் என எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
இதன் தொடக்கமாக பேரணிக்கான இலட்சினையை வெளியிடும் நிகழ்ச்சி புதுச்சேரி மாநில எஸ்டிபிஐ கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் தமிழ் மாநில செயலாளரும் மேலிட பொறுப்பாளருமான ஹமீத் பிரோஜ் தலைமை தாங்கி இலட்சினையை வெளியிட்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை 2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு தாய்வழி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும், காரைக்கால் பிராந்திய வளர்ச்சிக்கு சம வாய்ப்பும் சம நிதியும் வழங்க வேண்டும் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 17, 2026 அன்று சட்டமன்றம் நோக்கி இந்த பேரணி நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தீபாவளி சலுகைகள் மற்றும் திட்டங்கள் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், ஏனாம் பகுதியில் அர்ணா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
English summary: The SDPI announced a rally towards the Puducherry Assembly on November 17, 2026, pressing a three-point demand: raising Muslim reservation from 2 to 5 per cent, issuing maternal-lineage caste certificates to Puducherry natives, and equal opportunity and funds for Karaikal’s development. Hameed Firoz, the party’s Tamil state secretary and in-charge, released the rally logo at the Puducherry office, and also urged relief work for people in Yanam affected by Cyclone Arna.
