புதுச்சேரி

புதுச்சேரி கோரிமேட்டில் மின்கம்பியில் சிக்கிய ஆறு அடி நீள சாரை பாம்பு வனத்துறையினர் மீட்பு

புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மரத்திலிருந்து தவறி விழுந்து மின்கம்பியில் சிக்கிக் கொண்ட சுமார் ஆறடி நீள சாரை பாம்பை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

கோரிமேடு காவலர் பயிற்சி நிலையம் அருகே உள்ள பாரதி விதியில் மரத்தில் இருந்த சாரை பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து அங்கிருந்த மின்கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால் மின்கம்பியிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த அந்த பாம்பு நீண்ட நேரமாக தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மின்கம்பியில் சிக்கி இருந்த பாம்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சுமார் ஆறடி நீளமுள்ள சாரை பாம்பை லாபகமாக பிடித்து பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன