அருணா புயலால் ஏனாம் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்
ஏனாம், நவம்பர் 3: அருணா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலர் சித்திரஞ்சன்தாஸ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக ஏனாம் பிராந்திய நிர்வாக அதிகாரி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பிராந்திய நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா புயலால் விவசாயம், மீன்வளம், மின்சாரம், சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து பவர் பாயிண்ட் விளக்க காட்சி மூலம் மத்திய குழுவினரிடம் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து முதியோர் இல்லம் அருகே வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள், பரம்பேட்டா பிரதான சாலையில் சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் தரியாளத்திப்பா பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் குளத்துங்கன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் அனூப் தாகூர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் மற்றும் வேளாண் இயக்குனர் ஜெயசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் ஏனாமில் அர்னாப் புயல் காரணமாகப் பல்வேறு பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்து கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், முதற்கட்ட இடைக்கால நிவாரணமாக ஏனாமிற்கு ரூபாய் 50 கோடி வழங்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
English summary: A four-member central team led by Union Home Ministry joint secretary Chitaranjan Das inspected the Yanam region, which was severely affected by Cyclone Aruna. At a meeting, Yanam regional administrator Sivaraj Meena briefed the team on damage to agriculture, fisheries, power, roads and houses, after which the team viewed damaged houses, fallen electric poles on the Parampeta main road, and damaged paddy and coconut trees at Dariyalathippa. The report notes that Chief Minister Rangasamy had earlier written to Union Home Minister Amit Shah seeking Rs 50 crore as initial interim relief for Yanam.