புதுச்சேரி

அரியாங்குப்பம் காய்கறி மார்க்கெட் பகுதியில் கம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

புதுச்சேரி, அக்டோபர் 28: புதுச்சேரி அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து எதிரே அமைந்துள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் அனுமதி மீறி அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து எதிரே உள்ள காய்கறி, பழங்கள், மல்லிகை மற்றும் பூக்கடை மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்ட இடத்தையும் மீறி சாலை வரை டென்ட் ஷீட் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்தனர். இதனால் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. மேலும் மார்க்கெட் பகுதியில் செல்லும் மழைநீர் வடிகால்களிலும் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் குப்பைகளை அகற்ற முடியாமல் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசியது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வியாபாரிகளுக்கு கம்யூன் பஞ்சாயத்து சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி முன்னிலையில் இளநிலை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் மார்க்கெட் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன