கல்வி & வேலைவாய்ப்பு

மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தில் தலைமை செயல் அதிகாரி பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு!

புதுச்சேரி, நவம்பர் 4: மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் (MSME) கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்புகளில் தலைமை நிர்வாக அதிகாரிகள் (CEOs) மற்றும் முதன்மை இயக்குநர் உள்ளிட்ட முக்கிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திறமை மற்றும் செயல்திறன் மிக்க வல்லுநர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த அறிவிப்பின்படி, கொல்கத்தா மற்றும் புவனேஸ்வரில் உள்ள மத்திய கருவி அறை மற்றும் பயிற்சி மையத்தின் (CTTC) பொது மேலாளர், லூதியானா சிடிஆர் பொது மேலாளர், கன்னோஜ் நறுமணப் பொருட்கள் மேம்பாட்டு மையத்தின் (FFDC) முதன்மை இயக்குநர், பிரோசாபாத் கண்ணாடி தொழில் மேம்பாட்டு மையத்தின் (CDGI) முதன்மை இயக்குநர், ஜலந்தர் கைக்கருவிகள் மையத்தின் (CIHT) முதன்மை இயக்குநர் மற்றும் ஆக்ரா காலணி பயிற்சி மையத்தின் (CFTI) இயக்குநர் உள்ளிட்ட 7 முக்கிய தலைமை பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இப்பணியிடங்கள் தொடக்கத்தில் 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்றும், பணித்திறன் அடிப்படையில் பணிக்காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விவரங்களை மத்திய அரசின் www.dcmsme.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 2026 நவம்பர் 23-ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The Ministry of MSME invites applications from energetic, dynamic, result-oriented and talented professionals for the positions of CEOs in its autonomous bodies. Interested and eligible candidates are encouraged to visit the official websites for detailed information on eligibility criteria, qualifications, experience and the application process. Apply now and be a part of India’s MSME growth journey!
https://dcmsme.gov.in

English summary: The Union Ministry of MSME has issued a notification inviting applications for seven senior posts in its autonomous bodies, including general managers of the Central Tool Room and Training Centres at Kolkata and Bhubaneswar, and heads of centres in Ludhiana, Kannauj, Firozabad, Jalandhar and Agra. The posts will initially be filled on a five-year contract, extendable based on performance. Application forms and details are available on www.dcmsme.gov.in, and the last date to apply is 23 November 2026.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன