புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் மகளிர் சுய உதவி குழுவினரின் தீபாவளி சிறப்பு அங்காடி தொடக்கம்

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் தீபாவளி சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை தொடக்க விழா அரியாங்குப்பத்தில் உள்ள சாமிக்கண்ணு தனம்மாள் திருமண நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

நவம்பர் 2 முதல் ஆறாம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறும் இச்சந்தையை சட்டமன்ற உறுப்பினர்கள் ராமு, செந்தில்குமார், மோகன்தாஸ் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ். மாணிக்கதீபன் மற்றும் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அரியாங்குப்பம் வட்டாரத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரும் அவர்களது குடும்பத்தினரும் பயனடைந்து வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற அங்காடியில் சுய உதவி குழுவினர் பங்கேற்று ரூபாய் 22.05 லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்த நிலையில், இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

English summary: A Diwali special market and village fair for products made by women self-help groups opened in Ariyankuppam, organised by the Puducherry Rural Development Agency and the Ariyankuppam block development office. It runs from November 2 to 6 and was inaugurated by MLAs Ramu, Senthilkumar and Mohandass. Over 100 self-help group members are taking part; last year’s market saw sales worth Rs 22.05 lakh.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன