தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான வயது உச்சவரம்பு ஐந்து ஆண்டுகள் உயர்த்தப்பட்டது
சென்னை, அக்டோபர் 30: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை ஐந்து ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இந்த சலுகை பொருந்தும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் 1 தேர்வுகளில் பொதுப் பிரிவில் 37 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 42 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 52 ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், குரூப் 2 தேர்வுகளில் பொதுப் பிரிவுக்கு 35 ஆக வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே உள்ள சலுகை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
English summary: The Tamil Nadu government has raised the upper age limit for direct recruitment to government jobs by five years, applicable from October 30 to competitive exams including Group 1, Group 2 and Group 4. For Group 1 the limit is now 37 for the general category, 42 for reserved categories and 52 for persons with disabilities, and for Group 2 it is 35 for the general category, as stated in a press note.