புதுச்சேரி

புதுச்சேரியில் நல்லிரவில் வாலிபர் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐந்து பேர் தேடல்

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரியில் நல்லிரவில் வாலிபர் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கத்தியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியைச் சார்ந்த ஆறுமுக மகன் தமிழ்ச் செல்வன் (33). இவரது மனைவியும் மகளும் கடந்த வாரம் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், தமிழ்ச் செல்வன் நேற்றிரவு நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வில்லியப்பேட்டை நேதாஜி நகர் அருகே உள்ள தனது மாமியார் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் தமிழ்ச் செல்வனை வழிமறித்து சராமரியாக முகத்தில் கத்தியால் வெட்டியது. இதில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்த தமிழ்ச் செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்பேட்டை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சீனியர் எஸ்பி கலைவாணன் மற்றும் எஸ்பிக்கள் ஜிந்தா கோந்தரராமன், வம்சத ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.

English summary: A 33-year-old man from Puducherry was reported killed late at night by a five-member gang near Netaji Nagar, according to the report. His wife and daughter had reportedly left for France the week before. Police sent the body for post-mortem, senior police officers inspected the spot, and a case has been registered, with police searching for the five people who fled.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன