தீபவாளி பரிசு கேட்டு கடையிலையே மோதிக்கொண்ட காவலர்கள் இருவர் காரைக்காலுக்கு இடமாற்றம்
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் தீபாவளி பரிசு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சீருடையிலிருந்த இரண்டு காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் கவனிப்பு கேட்பதற்காக பெரியகடை காவல் நிலைய காவலரும், போக்குவரத்து காவல் நிலைய காவலரும் அந்தத் துணிக்கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது யாருக்கு எவ்வளவு பங்கு மற்றும் யார் யார் பட்டியலில் இடம் பெறுவது என்பது குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி துணிக்கடையிலேயே இருவரும் தள்ளுமுள்ளு மற்றும் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர். சீருடையில் இருந்த காவலர்கள் கடைக்குள் நடத்திய இந்தச் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து துணிக்கடை உரிமையாளர் இது குறித்து புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத்துறை சீனியர் எஸ்பி மற்றும் எஸ்பி ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், பெரியகடை சிறப்பு நிலை ஏட்டு சசிகுமாரை காரைக்கால் ஆயுதப்படைக்கும், கிழக்கு போக்குவரத்து காவலர் வெங்கடேசனை காரைக்கால் கடலோர காவல் படைக்கும் இடமாற்றம் செய்து காவல்துறை தலைமையக எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
English summary: A dispute over Diwali gifts reportedly led to two uniformed policemen scuffling inside a well-known textile shop in Puducherry town. According to the report, a Periyakadai station policeman and a traffic policeman had gone to the shop and argued over their shares. The shop owner is said to have complained with evidence to the anti-corruption officials, after which the police headquarters SP, Jintha Kothandaraman, ordered the two, Sasikumar and Venkatesan, transferred to Karaikal.

