புதுச்சேரி

திருமணம் செய்வதாக கூறி புதுச்சேரி பெண்ணிடம் ரூ.8.60 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி, நவம்பர் 3: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நான்கு ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு எண்க லட்சத்து அறுபதாயிர ரூபாய் மோசடி செய்ததாக விழுப்புரத்தை சேர்ந்த சதீஷ்குமார் மீது புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி பிரியதர்ஷினி நகரை சேர்ந்த நித்யா என்பவரிடம் தொழில் நெருக்கடி என கூறி வங்கி கடன் மற்றும் ரொக்கமாக மொத்தம் எண்க லட்சத்து அறுபதாயிர ரூபாயை சதீஷ்குமார் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்ய மறுத்து அவர் தனது சொந்த ஊருக்கு சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நித்யா அளித்த புகாரின் அடிப்படையில் கோரிமேடு போலீசார் சதீஷ்குமார் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Check Also
Close