புதுச்சேரி

புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் சீருடையில் பங்கேற்ற அமைச்சர் மற்றும் எம்எல்ஏக்கள்

புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரியில் ராஷ்ட்ரிய சுவயம் சேவ சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் சீருடை அணிவகுப்பு பேரணி மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஆர்எஸ்எஸ் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. இந்த பேரணியில் புதுச்சேரி பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் வெள்ளை சீருடை மற்றும் காக்கி பேண்ட் அணிந்து பங்கேற்றனர். ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதை ஒட்டி பேரணி செல்லும் வழி முழுவதும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற 101வது விஜயதசமி விழா அணிவகுப்பு ஊர்வலத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்பி செல்வ கணபதி மற்றும் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் செல்வம் உள்ளிட்டோர் வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி நிறப் பேண்ட் அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன