உழவர்கரை வயல்வெளி நகரில் பழுதடைந்த வீடுகளுக்கு தார்பாய் வழங்கிய எம்.எல்.ஏ. டாக்டர் நாராயணசாமி!

புதுச்சேரி: உழவர்கரை தொகுதிக்குட்பட்ட வயல்வெளி நகர் பகுதியில், மழைக்காலத்தை முன்னிட்டு பழுதடைந்த வீடுகளுக்குத் தேவையான தார்பாய்களை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு வழங்கினார்.
புதுச்சேரியில் பருவமழை மற்றும் தொடர் மழைப் பொழிவு நிலவி வரும் சூழலில், உழவர்கரை தொகுதி வயல்வெளி நகர் பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களின் பழுதடைந்த ஓட்டு வீடுகளில் மழைநீர் ஒழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் வீடுகளின் மேற்கூரைகளைப் பாதுகாக்கும் வகையில் தங்களுக்கு தார்பாய்கள் வழங்கி உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் இக்கோரிக்கையை கனிவுடன் ஏற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி, உடனடியாகத் தனது சொந்த செலவில் தார்பாய்களை வாங்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினார். மழைக்காலத்தில் தங்களின் பாதுகாப்பிற்காக விரைந்து நடவடிக்கை எடுத்து உதவிய சட்டமன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தனர்.


