ஏனாம் பகுதியில் உள்ள முக்கிய வடிகால்களை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் நேரில் ஆய்வு
ஏனாம், அக்டோபர் 27: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஏனாம் பகுதியில் உள்ள முக்கிய வடிகால்களை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அர்னாப் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏனாம் பகுதியில் உள்ள பீம் நகரிலிருந்து அக்ரகாரம் செல்லும் பிரதான வடிகால், ஜிஎம்சி பாலயோகி மைதானம், சிறுவர் பூங்கா, ஜிக்ரியா நகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய வடிகால்களை அவர் நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது வடிகாலில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி இருப்பதை கண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், உடனடியாக இயந்திரங்கள் மூலம் வடிகால்களை தூர்வாரி சுத்தம் செய்யவும், குடிநீர் தடையின்றி சீராக செல்வதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஏனாமில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பது குறித்தும் வடிகால்களில் அடைப்புகள் இன்றி நீர் செல்வதை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English summary: Minister Mallady Krishna Rao inspected main drains in Yanam as the northeast monsoon intensified and as a precaution ahead of Cyclone Arnab. He visited the Bheem Nagar-Agraharam drain, the GMC Balayogi ground, the children’s park, Zigriya Nagar and the new bus stand, and ordered officials to desilt the drains with machines and keep water flowing. An emergency meeting had been held under him on 26 October.