புதுச்சேரி

உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் சார்பில் புதுச்சேரியில் போலியோ விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி, அக்டோபர் 27: உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஈவ் சார்பில் புதுச்சேரியில் போலியோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த பேரணியில் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ராஜா தியேட்டர் சிக்னலில் தொடங்கிய இந்த பேரணியை புதுச்சேரி மாவட்ட சட்ட பணிகள் ஆணயத்தின் செயலர் ரமேஷ் மற்றும் ரோட்டரியின் மாவட்ட ஆளுநர் 2981 வைத்தியநாதன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

பேரணியானது நேரு வீதி, மிஷன் வீதி, செயின்ட் ஆன்கோ வீதி மற்றும் அரசு பொது மருத்துவமனை வழியாக சென்று காந்தி திடலை அடைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் ரோட்டரி உதவி ஆளுநர் சவுரிராஜன் பேரணியின் நோக்கம் குறித்தும், ரோட்டரி அமைப்பின் சமூக பணிகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன