புதுச்சேரி குருமாம்பேட்டில் செந்தமிழ் பார்மசி திறப்பு விழா முதலமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி குருமாம்பேட் வழுதாவூர் சாலையில் அமைந்துள்ள செந்தமிழ் பார்மசி திறப்பு விழா நடைபெற்றது. இதில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருந்தகத்தை திறந்து வைத்தார்.
விழாவிற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடாவும் இந்திராநகர் சட்டமன்ற உறுப்பினருமான ஏகேடி ஆறுமுகம், ஊசூடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.எஸ். அழகு என்கின்ற அழகானந்தம் மற்றும் உழவர்கரை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நாராயணசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குருமாம்பேட் வழுதாவூர் சாலை எண் 21ல் அமைந்துள்ள இந்த மருந்தகத்தில் பொதுமக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மருந்துகளுக்கும் 16 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் வசதிக்காக இலவசமாக வீடு தேடி மருந்துகள் வழங்கும் சேவையும் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.